உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்கள்...இந்தியாவில் படிப்பு தொடர கோரிய வழக்கு - விசாரணையை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்
இது தொடர்பாக பஞ்சாபை சேர்ந்த அர்ச்சிதா உள்ளிட்ட 7 மாணவர்கள் தாக்கல் செய்த பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. இன்று நடைபெற்ற விசாரணையின்போது, முதலாவது முதல் நான்காவது ஆண்டு வரை மருத்துவம் பயிலும் மாணவர்கள் மருத்துவக் கல்வியை இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் தொடர சட்டத்தில் இடமில்லை என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் தரவுகள் அடங்கிய விவரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அரசு குறிப்பிட்ட நிலையில், இது தொடர்பான விவரங்கள் தங்களுக்கு வழங்கப்படவில்லை என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த நிலையில் சீனாவில் மருத்துவம் பயில்வது தொடர்பான மனுக்களையும் இணைத்து விசாரிக்க வேண்டும் என மற்றோரு தரப்பினர் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம், விசாரணையை நவம்பர் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
Next Story