சோலார் மூலம் சூப்பர் பிளான் - "வனவிலங்குகளுக்கு நீர் பிரச்சனை இனி இல்ல"

x

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் தற்போது கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் நீர் நிலைகளில் தண்ணீர் வற்றியதால் வனவிலங்குகள் பாதிக்கப்பட்டுள்ளன. வனவிலங்குகளின் நீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில், ஆறு இடங்களில் அதிநவீன சோலார் மூலம் இயங்கக்கூடிய ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக, இதற்கு அருகில் இருக்கும் தண்ணீர் தொட்டிகளில் நீர் தானாகவே நிரம்பும். மேலும், ஒரு தொட்டியில் தண்ணீர் நிரம்பும் பட்சத்தில் மற்ற தொட்டிகளுக்கும் தண்ணீர் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்