சுந்தர் பிச்சை, சல்மான் கானின் ரகசிய தகவல்களை கசியவிட போவதாக ஹேக்கர் எச்சரிக்கை
சுந்தர் பிச்சை, சல்மான் கான் உட்பட 40 கோடி பேரின் டிவிட்டர் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக ஹேக்கர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். திருடப்பட்ட தகவல்களை பிளாக் வெப்சைட்டில் விற்பனை செய்ய உள்ளதாகக் கூறி, சில தகவல்களை வெளியிட்டுள்ளார். டிவிட்டர் கணக்கு எப்போது தொடங்கப்பட்டது? ஈமெயில் ஐடி, செல்போன் எண் உள்ளிட்ட தகவல்கள் அதில் உள்ளன. தன்னிடம் உள்ள பட்டியலில், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, நடிகர் சல்மான் கான் போன்ற பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், இந்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம், நாசா, உலக சுகாதார நிறுவனம் போன்றவற்றின் தகவல்களும் உள்ளதாக ஹேக்கர் கூறியுள்ளார். இது உண்மையாக இருந்தால், அதற்கு மிகப்பெரிய விலையை டிவிட்டர் நிறுவனம் கொடுக்கும் என கூறப்படுகிறது.
Next Story