நேரடியாகவே எச்சரித்த சுந்தர் பிச்சை... Google-ஆ இப்படி?.. அதிர்ச்சியில் டெக் உலகம்...
கடினமாக உழையுங்கள் இல்லையென்றால் வேலையில் இருந்து விலகி கொள்ளுங்கள் என கூகுள் நிறுவனம் தன் ஊழியர்களுக்கு அதிரடியான எச்சரிக்கையை விடுத்துள்ளது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்..
இந்தியா மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் உள்ள பல கோடி மக்கள் வேலை செய்யும் நிறுவனமாக உள்ளது கூகுள்..
ஆனால் தற்போது கூகுளிலேயே வேலை மந்தமாக நடைபெறுகிறது என்று சொன்னால் நம்பவா முடிகிறது..?
ஆம், அமெரிக்க, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் கூகுளின் டெக்னாலஜி பக்கம் வேலை மிகவும் தாமதமாக நடைபெறுவதாக ஒர் தகவல் வெளியானது..
அதனை உறுதிபடுத்தும் விதமாக சில நாட்களுக்கு முன்பு கூகுளின் சி இ ஒ சுந்தர்பிச்சை, வேலை குறைவாக இருக்கிறது, ஆனால் ஊழியர்கள் அதிகமாக இருக்கிறார்கள், வேகம் தேவை என்று ஊழியர்களுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கி இருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் கூகுள் நிறுவனம் ஊழியர்களுக்கு ஓர் எச்சரிக்கையை விடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் கடந்த சில மாதங்களாக புதிய வளர்ச்சியோ , புதிய திட்டங்களோ இல்லை என்றும், கடின உழைப்பு வேண்டும், இல்லையென்றால் வேலையை விட்டு விலகி கொள்ளலாம் என்றும் கூறியிருக்கிறது..
பொதுவாக கூகுள் நிறுவனம் எந்த காரணத்திற்காகவும் ஊழியர்களை வேலையை விட்டு விலக சொல்லியது கிடையாது..அதனால்
இதனை உறுதிபடுத்தும் விதமாக புலூம்பெர்க் (bloomberg) இதழ் கூகுள் க்ளவுட்டிடம் கேட்டபோது அந்நிறுவனம் அதனை உறுதி செய்திருக்கிறது..
இதற்கான காரணம் உக்ரைன் போர் விளைவாகவும், பணவீக்கம் காரணமாகவும் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்ததால் தான் புதிய முயற்சிகளை மேற்கொள்ள முடியாமல் போனதாக சொல்லபடுகிறது.
ஆப்பிள், மெட்டா, பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட நிறுவனங்களில் கிட்டதட்ட 40 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளதாகவும் ஆனால் தற்போது உள்ள நிலைமையால் அந்த இடங்கள் பூர்த்தி செய்யப்படாமல் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
கூகுள் மட்டுமல்லாமல் அமேசான், நெட்ஃபிளிக்ஸ் போன்ற பல்வேறு நிறுவனங்களும் ஊழியர்களை கணிசமாக குறைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அமெரிக்க, ஐரோப்பா நாடுகளில் இந்த மாதிரியான நிலைமை என்றால் இந்தியாவில் அதற்கு மாறாக முதல் 10 இடங்களில் உள்ள நிறுவனங்கள் அதிகப்படியான ஊழியர்களை வேலைக்கு தேர்வு செய்துள்ளன.
2020-2021 ஆம் ஆண்டை விட 2021-2022 ஆம் ஆண்டில் 3 லட்சம் ஊழியர்களுக்கு வேலை கிடைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.