ஹிமாச்சல் பிரதேச முதலமைச்சராக இன்று பதவியேற்பு... சுக்வீந்தர் சிங் சுக்குவுக்கு உற்சாக வரவேற்பு
ஹிமாச்சல் பிரதேசத்தின் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள சுக்வீந்தர் சிங் சுக்குவுக்கு, அம்மாநில தலைநகர் சிம்லாவில் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஹிமாச்சல் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சியை பிடித்த நிலையில், அம்மாநில முதலமைச்சராக சுக்வீந்தர் சிங் சுக்கு இன்று பதவியேற்க உள்ளார். அவருடன் முகேஷ் அக்னிஹோத்ரி துணை முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.
Next Story