திடீர் வைரலாகும் "நிஜ மாமன்னன்"...ஜெயலலிதாவின் Thug Life சம்பவங்கள்...படத்தில் கொட்டி கிடக்கும் குறியீடுகள்.. அரசியல் Decoding..!

x

மாமன்னன் திரைப்படம், அதிமுக முன்னாள் சபாநாயகர் தனபால் கதையா...? என்பது குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு

தேவர் மகன் குறித்த இயக்குநர் மாரி செல்வராஜ் சர்ச்சையில் தொடங்கி பலதரப்பட்ட எதிர்ப்புக்கு மத்தியில் வெளியாகியிருக்கிறது மாமன்னன் திரைப்படம்...

சேலம் மாவட்ட அரசியல் களத்தை கருவாக கொண்டு சாதிய அரசியல் பேசும் படமாக எடுக்கப்பட்டுள்ளது.

நாய், பன்றி, குதிரை என்ற வழக்கமான மாரி செல்வராஜின் குறியீடுகளை கொண்ட படத்தில், ஆதிக்க குணம் கொண்ட மாவட்டச் செயலாளராக ஃபஹத் பாசில் வருகிறார். மாவட்டத்தில் தனித் தொகுதியாகும் காசிபுரத்தில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆகிறார் படத்தில் மாமன்னனாக வரும் வடிவேலு...

எம்.எல்.ஏ. ஆனாலும் சொந்த கட்சியில் அவர் எப்படி சாதியரீதியாக ஒடுக்கப்படுகிறார், அதை எப்படி சமாளித்து மீண்டு வருகிறார் என்பதை படம் பேசுகிறது. படத்தில் எம்.எல்.ஏ. ஆகும் வடிவேலு, சபாநாயகராக அமரும் காட்சியும் இடம் பெறுகிறது. இதில் காசியாபுரம் தொகுதி, வடிவேலு சபாநாயகராக அமர்வது போன்ற குறியீடுகளை வைத்து படம் அதிமுக முன்னாள் சபாநாயகர் தனபால் வாழ்க்கையை பிரதிபலிக்கிறது என பேசப்படுகிறது.

தனபாலை மையப்படுத்திதான் படம் எடுக்கப்பட்டதா என்ற கேள்விக்கு மறுப்பு தெரிவிக்காது, மக்கள் பார்த்து புரிந்துகொள்ளட்டும் என சொல்லிவிட்டார் மாரி செல்வராஜ்

மாமன்னன் படத்தால் இப்போது பேசு பொருளாகியிருக்கும் தனபால், அதிமுக ஆரம்பிக்கப்பட்டது முதல் அக்கட்சியில் பயணித்து வருகிறார். 1977 தொடங்கி 2021 வரையில் 7 முறை எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். 2001-ல் தனபாலை உணவுத்துறை அமைச்சராக்கிய ஜெயலலிதா, 2011-ல் ராசிபுரத்திலிருந்து அவர் வென்றபோது, துணை சபாநாயகராகவும், 2012-ல் சட்டப்பேரவை சபாநாயகராகவும் ஆக்கினார்.

ஜெயலலிதா அவரை உணவுத்துறை அமைச்சராக அறிவித்ததற்கு பிற காரணங்களும் சொல்லப்பட்டது. பட்டியலின வகுப்பை சேர்ந்த அவர் வழங்கிய சாப்பாட்டை சொந்த கட்சிக்காரர்களே சாப்பிடவில்லை எனவும் அதற்கு பதிலடியாக ஊருக்கே சாப்பாடும் போடும் அமைச்சராக அவரை ஜெயலலிதா அறிவித்ததாகவும் அப்போதைய காலக்கட்டத்தில் பேசப்பட்டது. கட்சி நிர்வாகிகள் அவருக்கு உரிய மரியாதை வழங்கவில்லை என புகார் எழுந்ததாகவும், அதனால் 2012-ல் அவருக்கு சட்டப்பேரவையில் எல்லோரும் மரியாதை செலுத்தும் சபாநாயகர் பொறுப்பை ஜெயலலிதா வழங்கியதாகவும் பேசப்பட்டது.

தமிழகத்தின் முதல் பட்டியலின சபாநாயகர் தனபாலே ஆவார். இப்போது அவரது கதையே படமாக வந்திருப்பதாக பேசப்படும் சூழலில், அவரிடமே இதுகுறித்து கேட்டோம்...

தனபால், அதிமுக முன்னாள் சபாநாயகர்

படம் சமூக பாகுபாடு அரசியலை பேசும் சூழலில் திராவிட கட்சிகளில் அப்படியொரு நிலை இருந்தது இல்லை என்கிறார் பத்திரிக்கையாளர் துரை கருணா...

சாதிய ஏற்றதாழ்வு அரசியலை பேசியிருக்கும் மாமன்னன் கோலிவுட் முதல் கோட்டை வரையில் பேசு பொருளாகியிருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்