கோவா அரசியலில் திடீர் திருப்பம்..! பாஜகவில் இணைந்த முன்னாள் முதல்வர் உள்பட 8 எம்.எல்.ஏ.க்கள்
40 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கோவா சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சிக்கு 11 எம்.எல்.ஏ.க்கள் மொத்தம் உள்ளனர்.
கோவாவில் வலுவான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் கூட்டணி உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும் முன்னாள் முதல்வருமான திகம்பர் காமத், மைக்கேல் லோபோ, டெலிலா லோபோ, ராஜேஷ் பால்தேசாய், கேதார் நாயக், சங்கல்ப் அமோன்கர், அலிக்சோ செக்வேரா, ருடால்ப் பெர்னாண்டஸ் உள்ளிட்ட 8 சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று காலை காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தங்களை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
Next Story