கலெக்டருக்கு வந்த திடீர் மெசேஜ் - கண்ணீர் விட்டு கதறிய ஊர் மக்கள்...
நாகை ஆட்சியர் அருண் தம்புராஜ் பணியிட மாற்றம் பெற்று கடலூர் ஆட்சியராக பொறுப்பேற்க உள்ளார். பிரதாபராமபுரம் ஊராட்சியில் இலவச திறன் மேம்பாட்டு மையத்தின் அரசு போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்பினை துவங்கி வைத்த ஆட்சியர், மாணவர்களின் பெற்றோர்கள் மத்தியில் உரையாற்றினார். அதனை தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு வைத்து சுற்றுச்சூழல் மேம்பாடு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ஆட்சியர் விடைபெறும் நேரத்தில் அவர் பங்கேற்கும் கடைசி நிகழ்வு என்பதால் அப்பகுதி கிராம மக்கள் அருண் தம்புராஜுக்கு மலர்தூவி பிரியா விடை கொடுத்தனர். எங்கள் மாவட்டத்தை விட்டு போக வேண்டாம் என கண்ணீருடன் தெரிவித்த கிராம மக்களுக்கு அரசின் உத்தரவுப்படி கடலூர் சென்றுதான் ஆக வேண்டுமென பிரிய மனமின்றி புறப்பட்டார். வாய்ப்பு கிடைக்கும் போது நிச்சயம் வந்து ஊர் மக்களைப் பார்த்துச் செல்ல வேண்டும் என கிராம மக்கள் உரிமையோடு கோரிக்கை விடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.