திடீர் பிரசவ வலி... வாகன வசதி இல்லை... 15 கி.மீ. நடந்தே சென்று குழந்தை பெற்ற பெண்

x

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே, 15 கிலோ மீட்டர் நடந்தே சென்று பிரசவித்த பெண் வீடு திரும்பிய போது, மாவட்ட நிர்வாகம் அழைத்துச் சென்று சிகிச்சை அளித்த‌து.

அணைக்கட்டு அருகே உள்ள முத்தன் குடிசை மலை கிராமத்தை சேர்ந்தவர் சிவகாமி. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர், 2 நாட்களுக்கு முன்பு பிரசவ வலி ஏற்பட்டது. அப்போது, வாகன வசதி இல்லாத நிலையில், டோலி கட்டி தூக்கிச் செல்ல சிவகாமி மறுத்துள்ளார். இதனால், 15 கிலோ மீட்டர் நடந்து சென்று, துத்திக்காட்டிற்கு கிராமத்திற்கு வந்து, அங்கிருந்து ஆட்டோ மூலம் பாகாயத்தில் உள்ள தனியார் மருத்துவமனையை அடைந்தார். அவருக்கு சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்த நிலையில், இரண்டாவது நாளிலேயே வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். இரவு நேரம் என்பதால் துத்திக்காடு ஊராட்சி மன்றத் தலைவர் வீட்டில் அவர் தங்கியிருந்ததை அறிந்த வருவாய்த்துறையினர், மகப்பேறு முடிந்து 3 நாட்கள் கழித்துத்தான் வீட்டுக்கு செல்ல வேண்டும் எனக்கூறி, நள்ளிரவு ஒரு மணியளவில் இருவரையும் அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருவருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டது. தாயும் சேயும் நலமாக இருந்த‌தால், அவசர ஊர்தி மூலம் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்