நிவாரண முகாம்களில் திடீர் ஆய்வு - டெல்லி முதல்வர் அதிரடி | Delhi | Flood | Kejriwal |
டெல்லியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்த மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நிவாரண முகாம்களில் ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்குமிடத்துடன், உணவு, குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு புத்தகங்கள் மற்றும் உடைகள் வழங்கப்படும் என தெரிவித்தார். ஆதார் போன்ற முக்கிய ஆவணங்களை இழந்தோருக்கு சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு, மீண்டும் வழங்கப்படும் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
Next Story