திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு.. முடங்கிய தரை பால பணிகள் - அதிர்ச்சி காட்சிகள் வெளியீடு
வேப்பனப்பள்ளி மற்றும் சூளகிரி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தினமும் தொடர் கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் திங்கட்கிழமை காலை முதல் சாரல் மழை பெய்து வந்த நிலையில் மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை சூளகிரியில் கனமழை பெய்தது. மழையில் சூளகிரி பந்தர்குட்டை கிராமத்தில் உள்ள சின்னாறில் நீர்வரத்து அதிகரித்தது. அந்த ஆற்றில் தரைபாலம் பணிகள் மேற்கொண்டு வந்த நிலையில், வெள்ள பெருக்கு ஏற்பட்டு கரை உடைந்தது. ஆற்றில் அருவி போல் மழை நீர் பெருகெடுத்து ஓடியது. இந்த வெள்ளபெருக்கால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. தரை பாலம் பணிகளும் முடங்கின.
Next Story