பேருந்து ஓட்டும் போது ஏற்பட்ட திடீர் மயக்கம்.. அடுத்து நடந்த ஆச்சரியம்

x

பேருந்து ஓட்டிக் கொண்டிருக்கும் போது திடீரென மயக்கம் ஏற்பட்ட நிலையில், ஓட்டுநர் ஒருவர் பேருந்தை நிறுத்தி பொறுப்பாக பயணிகளை பத்திரமாக இறக்கி விட்ட சம்பவம் சென்னை திருவொற்றியூரில் நிகழ்ந்துள்ளது...

வடசென்னை திருவொற்றியூர் அஜாக்சில் இருந்து பூந்தமல்லி வரை செல்லக்கூடிய வழித்தடத்தில் இயங்கும் பேருந்தில் ஓட்டுநராக பணி புரிபவர் கார்த்திகேயன்... வழக்கம் போல் இன்று அவர் பேருந்தை இயக்கினார்... பேருந்து சரியாக கல்மண்டபத்தை நோக்கி வந்து கொண்டிருந்த போது கார்த்திகேயனுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டுள்ளது... உடனடியாக சுதாரித்துக் கொண்ட கார்த்திகேயன் பேருந்தின் வேகத்தை குறைத்து சாலையின் ஓரமாக நிறுத்தி பேருந்தில் இருந்த பயணிகளை இறக்கி விட்டுள்ளார்... பின்னர் நடத்துநரிடம் விவரத்தைக் கூறிய நிலையில், நடத்துநர் அருகில் இருந்த போக்குவரத்து உதவி ஆய்வாளரிடம் கூறி அவரின் உதவியுடன் மருத்துவமனையில் கார்த்திகேயன் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கார்த்திகேயனுக்கு குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக மயக்கம் ஏற்பட்டிருப்பதாக கூறி முதலுதவி அளித்துள்ளனர். சிகிச்சைக்கு பிறகு ஓட்டுநர் கார்த்திகேயன் வீடு திரும்பியுள்ளார்... தனக்கு மயக்கம் ஏற்பட்ட போதும் கார்த்திகேயன் சுதாரித்துக் கொண்டு பொறுப்புணர்வுடன் செயல்பட்டு பயணிகள் உயிரைக் காப்பாற்றிய சம்பவம் பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது


Next Story

மேலும் செய்திகள்