விநாயகர் சிலையுடன் இந்து முன்னணியினர் திடீர் தர்ணா போராட்டம்

x

திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டியில் கொடிகள் அகற்றப்பட்டதை கண்டித்து, நகராட்சி அலுவலகம் முன்பாக பெரிய விநாயகர் சிலையை வைத்து இந்து முன்னணியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த திருமுருகன் பூண்டி போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அகற்றிய கொடிகளை மீண்டும் அதே இடங்களில் கட்ட வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். கலைந்து செல்ல மறுத்த இவர்களை, போலீசார் வலுக்கட்டாயமாக காவல் வாகனங்களில் ஏற்றினர். அப்போது இருதரப்புக்கும் இடையே வாக்குவாதமும், தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்