இந்திய ராணுவம் எடுத்த திடீர் முடிவு..
மிக்-21 விமானங்களின் பயன்பாடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது...
கடந்த 8-ஆம் தேதி, ராஜஸ்தான் மாநிலம் சூரத்கர் பகுதியின் விமான படை தளத்தில் இருந்து, வழக்கமான பயிற்சிக்காக 'மிக்-21' விமானம் புறப்பட்டுச் சென்றது. அப்போது எதிர்பாராத விதமாக, ஒரு வீட்டின் மீது விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானி காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், பொதுமக்கள் மூன்று பேர் உயிரிழந்தனர். இதன் எதிரொலியாக, 'மிக்-21' விமானங்களின் இயக்கத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக விமான படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உரிய பரிசோதனைகள், மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்கு பின்னர், அவை மீண்டும் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 50 'மிக்-21' விமானங்களின் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 1960-களில் இருந்து இந்த வகை விமானங்கள் இந்திய விமானப்படையில் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.