திடீர் சூறாவளி... நடு கடலில் கவிழ்ந்த படகு - கேரளா அருகே பயங்கரம்
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே, கடலில் மீன்பிடி படகு கவிழ்ந்து மீனவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலைப்பொழி பகுதியில் இருந்து 4 மீனவர்கள் படகில் மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது பலத்த காற்று வீசியதில், படகு கவிழ்ந்து நான்கு பேரும் கடல் நீரில் மூழ்கினர். இதில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மீனவர் ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஏனைய மூன்று மீனவர்களையும் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
Next Story