CSK அணியில் திடீர் மாற்றம்... வெளியான தகவல்

x

நியூசிலாந்து ஆல்-ரவுண்டர் ஜேமிசனுக்குப் பதிலாக தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் சிசான்டா மகலாவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

கைல் ஜேமிசனை ஒரு கோடி ரூபாய்க்கு சென்னை அணி ஏலம் எடுத்தது.

எனினும் காயம் காரணமாக எதிர்வரும் ஐபிஎல் தொடரில் ஜேமிசனால் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது.

இதனால், அடிப்படைத் தொகையான 50 லட்சம் ரூபாய்க்கு மகலாவை சென்னை அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

சமீபத்தில் நடந்த தென் ஆப்பிரிக்க டி20 தொடரில், மகலா சிறப்பாகப் பந்துவீசி 14 விக்கெட்டுகளை சாய்த்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்