கருமேகங்களால் சூழ்ந்த தலைநகரம்..வான்வழி தாக்குதலால் அதிகரிக்கும் போர் பதற்றம்..!
சூடானில் இருந்து வெளிநாடுகளின் தூதரங்கள் மற்றும் பொதுமக்கள் வெளியேறுவதறுக் அனைத்து உதவிகளையும் செய்வதாக அந்நாட்டு ராணுவம் ஒப்புதல் அளித்துள்ளது. சூடானில், ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே மோதல் வெடித்து, உள்நாட்டு போராக மாறியுள்ளது. இதனால், அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் தங்களது தூதரங்களை காலி செய்து, பொதுமக்களை வெளியேற்ற முடிவு செய்துள்ளன. இதற்கு சூடான் ராணுவம் அனுமதி அளித்துள்ளது. மேலும், தேவையான உதவிகளையும் செய்வது என சூடான் ராணுவம் அறிவித்துள்ளது. இதே போன்று, விமானங்கள் மூலம் வெளிநாட்டவர்கள் செல்ல ஏதுவாக விமான நிலையம் மற்றும் வான்வெளியை திறக்க துணை ராணுவமும் அனுமதி அளித்துள்ளது.
Next Story