"கீழ வாப்பா..." என கெஞ்சிய மகன் -"பிள்ளைங்க பாவம்பா"-சமாதானப்படுத்திய காவலர் - எதையும் காதில் வாங்காமல் குதித்த இளைஞர் -கன்னியாகுமரியில் அதிர்ச்சி சம்பவம்

x
  • மாடியில் இருந்து குதித்து விடுவேன் என பிள்ளைகள் கண்முன்னே மனைவியிடம் தற்கொலை மிரட்டல் விடுத்த கேரள இளைஞரைத் தான் இந்தக் காவலர், சமாதானப் படுத்த முயற்சி செய்து கொண்டிருக்கிறார்...
  • யார் அந்த இளைஞர்?...என்ன தான் பிரச்சினை அவருக்கு? என நாம் விசாரித்த போதுதான் தெரிந்தது, இதற்கு மூல காரணமே மது தான் என்பது...
  • கேரள மாநிலம் நூறநாடு பகுதியை சேர்ந்தவர் தான் இந்த பிரதீஷ் என்ற 32 வயது இளைஞர்... இவர் தன் மனைவி, 2 குழந்தைகள், மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த 52 பேருடன் தமிழ்நாட்டிற்கு உற்சாகமாக சுற்றுலா கிளம்பியுள்ளார்...
  • பார்க்க வேண்டிய இடமெல்லாம் பார்த்தாயிற்று... கடைசியாக குமரி வந்த போது வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது...
  • பெரியார் நகரில் உள்ள விடுதியில் அனைவரும் அறை எடுத்துத் தங்கவே, அங்கு பிரதீஷ் "மூக்கு முட்ட" குடித்துள்ளார்... சுற்றுலா வந்த இடத்தில் இது அசிங்கமாக இல்லையா? என மனைவி கேட்கவே... அவ்வளவு தான்... இது தான் சாக்கு என சண்டை கட்டத் துவங்கினார் பிரதீஷ்...
  • அதற்கு அடுத்த கட்டமாய் தான் தங்கும் விடுதியின் மேல் தளத்திற்கு சென்ற அவர், அங்கிருந்து குதித்து விடுவதாய் மனைவி, பிள்ளைகளை மிரட்டியுள்ளார்...
  • தந்தை தங்கள் கண்முன்னே மாடியில் இருந்து குதித்து விடுவதாய் மிரட்டினால் இந்த சின்னஞ்சிறு வயதில் அந்தப் பிஞ்சுக் குழந்தைகளின் மனம் என்ன பாடு பட்டிருக்கும்?... கணவனே கதியென நம்பி வந்த மனைவியின் மனம் எவ்வளவு வேதனை அடைந்திருக்காது?... ஆனால் பிரதீசுக்கு போதை கண்ணை மறைத்து விட்டது...
  • இவர்களின் அலறல் சத்தம் கேட்டு பிற சுற்றுலாப்பயணிகள் பதறியடித்து ஓடிவர, தகவலறிந்து காவல்துறையினரும், தீயணைப்புத் துறையினரும் சம்பவ இடத்தில் ஆஜராகினர்...
  • எவ்வளவு முடியுமோ அவ்வளவு சமாதானப் படுத்த முயன்றனர் காவலர்கள்...ஆனால் கொஞ்சம் கூட மசியாத பிரஷீஷ் அனைவருக்கும் "தண்ணி" காட்டிக் கொண்டிருந்தார்...
  • அப்போது தான் அந்த சம்பவம் நிகழ்ந்தது... யாரும் எதிர்பாராத சமயத்தில் திடீரென மாடியில் இருந்து கீழே குதித்து விட்டார் பிரதீஷ்... அதைக் கண்டவர்களின் இதயத் துடிப்பே ஒரு நிமிடம் நின்று போய் விட்டது....
  • மயக்கமடைந்த பிரதீஷ் அதிர்ஷ்டவசமாக வெறும் காயங்களுடன் உயிர் பிழைத்தார்... உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனை அழைத்துச் சென்றனர் காவலர்களும், தீயணைப்புத் துறையினரும்...
  • கேரள இளைஞரின் இந்தச் செயலால் அந்த சுற்றுப்பகுதியே சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக கதிகலங்கிப் போனது.

Next Story

மேலும் செய்திகள்