தமிழகத்தில் இப்படியொரு மோசமான ஊரா?...நடுங்கவிடும் சிறுமியின் அபய குரல்

x

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே அமைதியாகவும் காட்சியளிக்கிறது நாய்க்குத்தி கிராமம்... ஆனால் அங்கு வசிக்கும் சின்னக்கரியன் குடும்பத்தில் அத்தகைய அமைதி காணப்படவில்லை. ஆம் 6 ஆண்டுகளாக தங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளார்கள் என வேதனை தெரிவிக்கிறார்கள். இதற்கு பின்னணி நிலப்பிரச்சினை எனவும் குமுறுகிறார்கள். 30 வருடங்களுக்கு முன்பாக சின்னக்கரியன், ஆறுமுகம் என்பவருக்கு வழிப்பாதைக்காக 3 சென்ட் நிலத்தை விலைக்கு கொடுத்துள்ளார்.... ஆனால் ஆறுமுகம் மகன் சக்திவேல் அதனை 5 சென்ட் பத்திரப்பதிவு செய்திருக்கிறார் எனக் கூறும் சின்னக்கரியன், அதனை கேட்ட போது சக்திவேலும், அவரது உறவினர்களும் தனது குடும்பத்தாரை தாக்கியதாகவும், அவதூறாக பேசியதாக சொல்கிறார்.

இதுகுறித்து புகார்கள் அளித்தும் எங்கும் தீர்வு கிடைக்கவில்லை எனவும் கவலை தெரிவிக்கிறார்கள்

இதுமட்டுமல்ல தனது மகளுக்காக கலைஞர் வீடு திட்டத்தில் கட்டப்பட்ட வீட்டையும் சக்திவேல், அவரது ஆட்பலம் கொண்டு இடித்து தள்ளிவிட்டார் எனவும் அவர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள். யாரும் எங்களிடம் பேசக்கூடாது என ஊர் கட்டுப்பாடு உள்ளதாகவும் வேதனை தெரிவிக்கிறார்கள். பள்ளியில் தங்கள் வீட்டு சிறுமியை சிறுநீர் குடிக்க செய்துள்ளனர் எனவும் மனம் குமுறுகிறார்கள்...

கிராமத்தில் 21 ஆம் நூற்றாண்டிலும் தீண்டாண்மை கோர தாண்டவம் ஆடுவதாக கவலை தெரிவிக்கும் அவர்கள், தங்களது பிரச்சினையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறார்கள்.


Next Story

மேலும் செய்திகள்