அடுத்தடுத்து தொடரும் ஷவர்மா பஞ்சாயத்து | வாடிக்கையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி | இணையத்தில் வைரலாகும் வீடியோ

x

கோவையில் ஆன்-லைனில் ஆர்டர் செய்த சவர்மா கெட்டுப் போனதாக கூறி, வாடிக்கையாளர் ஒருவர் கடை ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்யும் வீடியோ, சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. ஆண்ட்ரூஸ் என்பவர், அன்னூர் அரசு மருத்துவமனைக்கு எதிரே செயல்பட்டு வரும் கோகுல் என்பவருக்கு சொந்தமான கடையில், ஆன்-லைனில் ஷவர்மா ஆர்டர் செய்து வாங்கியுள்ளார். ஆனால், ஷவர்மா கெட்டுப்போய் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சி அடைந்த ஆண்ட்ரூஸ், தனது நண்பர்களுடன் சம்பந்தப்பட்ட கடைக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், தவலறிந்து வந்த போலீசார், விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்