டெல்லியில் அடுத்தடுத்து வரும் ஊழல் புகார்கள்... | ஆரம்பக்கட்ட விசாரணைக்கு பதிவு செய்தது சிபிஐ
டெல்லியில் தாழ்தள பேருந்துகள் வாங்கியதில் ஊழல் நடைபெற்றதாக எழுந்த புகார் குறித்து விசாரிக்க, ஆரம்ப விசாரணைக்கு சிபிஐ பதிவு செய்துள்ளது. டெல்லியில் புதிய மது கொள்கை ஊழல் பூதாகரமாகியுள்ளதால், சிபிஐ சோதனை நடத்தி விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், அம்மாநிலத்தில், ஆயிரம் தாழ்தள பேருந்துகள் வாங்கியதில் ஊழல் எழுந்த புகார் குறித்து விசாரணை நடத்துவதற்காக, சிபிஐ ஆரம்பக்கட்ட விசாரணை பதிவு செய்துள்ளது. விரைவில் விசாரணை தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
Next Story