"வாரிசு அரசியல்.. ஊழல்.. ரெய்டுகள் தொடரும்" - பகிரங்கமாக எச்சரித்த அமித் ஷா
அமலாக்கத்துறை இயக்குநராக சஞ்சய் மிஸ்ராவின் பதவி காலம் முடிவடைந்த பின்னர் 3 முறை மத்திய பாஜக அரசு பணி நீட்டிப்பு வழங்கியது. இது தொடர்பான வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம் சஞ்சய் குமார் மிஸ்ராவுக்கு வழங்கப்பட்ட பணி நீட்டிப்பு செல்லாது என்றும், அவர் ஜூலை 31 ஆம் தேதி வரை மட்டுமே பதவியில் தொடர்வார் என உத்தரவிட்டது. இந்த தீர்ப்புக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா, அமலாக்க துறையின் இயக்குனர் யார் என்பது முக்கியமல்ல என்றும், இயக்குனராக யார் பொறுப்பேற்றாலும் வளர்ச்சிக்கு எதிரான மனநிலை கொண்ட, சொகுசு கிளப்பை சேர்ந்த வாரிசு அரசியலின் ஊழலை சோதனை செய்வார்கள் என்று தெரிவித்துள்ளார்.
Next Story