கே.எல்.ராகுலுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை
தொடைப் பகுதியில் காயம் அடைந்த இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரின்போது காயம் அடைந்த கே.எல்.ராகுல் தொடரில் இருந்தும் வெளியேறினார். இந்நிலையில், தனக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக இன்ஸ்டாகிராமில் ராகுல் தெரிவித்து உள்ளார். தான் குணமடைந்து வருவதாகவும் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் ராகுல் கூறி உள்ளார்.
Next Story