அடுத்தடுத்து நிகழும் அதிர்ச்சி சம்பவங்கள்... கல்லூரி விடுதி மாடியிலிருந்து விழுந்த மாணவி - தற்கொலையா? வேறு காரணமா?

x

தேனி மாவட்டம் குப்பநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த மகேஸ்வரி என்பவர், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முதுகலை இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். நள்ளிரவு நேரத்தில், பெண்கள் விடுதி மாடியில் இருந்து மகேஸ்வரி கீழே விழுந்துள்ளார். இதனைக் கண்ட அவரது தோழிகள், படுகாயமடைந்த நிலையில் கிடந்த மகேஸ்வரியை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், மாணவி தவறி விழுந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மாணவியின் செல்போனை மீட்டு போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். விடுதி மாடியிருந்து மாணவி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம், சக மாணவ- மாணவிகள் மற்றும் பேராசியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்