"படிப்பு முக்கியம் பிகிலு!" - செருப்பு பாலிஷ்-க்கு ரூ.10,000! ஷூ பாலிஷ் போடும் டிப்-டாப் பேராசிரியர்
"படிப்பு முக்கியம் பிகிலு!" - செருப்பு பாலிஷ்-க்கு ரூ.10,000! ஷூ பாலிஷ் போடும் டிப்-டாப் பேராசிரியர்
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பேருந்து நிலையத்தில் அமர்ந்து பொதுமக்களின்
ஷூக்களுக்கு பாலிஷ் போட்டு வரும் இவரது பெயர், செல்வக்குமார். தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வரும் இவர், கடந்த 18 ஆண்டுகளாக வார விடுமுறையில் இவ்வாறு ஷூ பாலிஷ் போடும் தொழிலில் இறங்கிவிடுவது வழக்கம்.
அதில் கிடைக்கும் நிதி கொண்டு ஆதரவற்ற மாணவர்களுக்கு அவர் கல்வி உதவி செய்து வருகிறார்.
இவரின் இந்த உன்னத எண்ணத்தை ஊக்குவிக்கும் விதமாக கோவூர் ஊராட்சி மன்ற தலைவர் சுதாகர், தனது செருப்புக்கு பாலிஷ் செய்த அவருக்கு பத்தாயிரம் ரூபாய் நிதி வழங்கினார்.
இதை பார்த்த அங்கிருந்த மக்களும் தாங்களாக முன்வந்து செருப்புக்கு பாலிஷ் போட்டு, மாணவர்களின் கல்விக்கு தங்களால் முடிந்த நிதியை அளித்தனர்.