'புள்ளிங்கோ' ஸ்டைலில் வந்த மாணவர்கள் - சென்னை கவுன்சிலர் செய்த தரமான சம்பவம்
சென்னை திருவொற்றியூரில் உள்ள அரசுப் பள்ளியில் விதவிதமான சிகை அலாங்காரத்துடன் வந்த மாணவர்களுக்கு முடி திருத்தம் செய்யப்பட்டது.
வடசென்னை திருவொற்றியூர் பகுதியில், ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஆயிரத்து 350க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு பயிலும் மாணவர்கள், 'புள்ளிங்கோ' பாணியில், வித விதமான சிகை அலங்காரத்துடன் வந்தனர். அவர்களை வரிசையாக அமர வைத்த ஆசிரியர்கள், முடி திருத்துபவர்களை பள்ளி வளாகத்திற்கு வரவழைத்து முடி திருத்தம் செய்தனர். சில மாணவர்கள் முடி திருத்துவதற்கு வருத்தம் தெரிவித்தனர். அவர்களிடம், முடி திருத்துவதுதான் நல்லது என்று அப்பகுதி மாமன்ற உறுப்பினரான கே.பி. சொக்கலிங்கம் அறிவுரை கூறி சமாதானம் செய்தார். இதையடுத்து அவர்களும் முடி திருத்தம் செய்து கொண்டனர். 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் 75 மாணவர்களுக்கு முடி திருத்தம் செய்யப்பட்டது.