விடுதியில் காலை உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் - மருத்துவம் பார்த்த முன்னாள் அமைச்சர்

x

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஆதிதிராவிட நல விடுதியில் உணவு அருந்திய 10க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதையடுத்து, மருத்துவமனைக்கு நேரில் சென்று முன்னாள் அமைச்சர் சரோஜா மருத்துவம் பார்த்தார். குருசாமிபாளையத்தில் செங்குத்தர் மகாஜன அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். அந்த பள்ளியில் ஆதிதிராவிடர் நல விடுதியில் கொல்லிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 24 மாணவர்கள் தங்கி பயின்று வருகின்றனர். அவர்களுக்கு காலை உணவாக சாப்பாடு மற்றும் முள்ளங்கி சாம்பார் உணவு வழங்கப்பட்டுள்ளது. உணவு அருந்திய விடுதி மாணவர்கள் பள்ளிக்குச் சென்ற வகுப்பறையில் பயின்று கொண்டிருந்த போது திடீரென வாந்தி, மயக்கம் அடைந்ததால் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்