கடலில் அலையில் சிக்கிய மாணவ, மாணவிகள்.. 3 மாணவிகள் மீட்பு - மாயமான மாணவரை தேடும் பணி தீவிரம்

x

காரைக்கால் அருகே கடலில் குளித்த மருத்துவ கல்லூரி மாணவர் அலையில் இழுத்துச் செல்லப்பட்டார். திருவாரூர் மருத்துவ கல்லூரியை சேர்ந்த 15 மாணவ, மாணவிகள் காரைக்காலுக்கு சுற்றுலா வந்துள்ளார். அனைவரும் கடலில் குளித்துக் கொண்டிருந்த நிலையில், 3 மாணவிகள் மற்றும் ஒரு மாணவர் அலையில் சிக்கினர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் கடலில் குதித்து உயிருக்கு போராடிய மூன்று மாணவிகளை மீட்ட நிலையில், மாணவர் சிவகுமார் அலையில் இழுத்துச் செல்லப்பட்டார். மீட்கப்பட்ட மாணவிகள், காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்