தமிழகத்தை உலுக்கிய மாணவன் வழக்கு.. நீதிமன்றத்தில் திடீர் திருப்பம்...

x

காரைக்காலில் படிப்பில் ஏற்பட்ட போட்டி காரணமாக மாணவனுக்கு, குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

காரைக்கால் அருகே உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்த மாணவன் பால மணிகண்டனை சக மாணவியின் தாய் சகாயராணி, குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்தார்.

இந்த வழக்கில் தாய் சகாய ராணி, கடந்த 5 மாதங்களாக, புதுச்சேரி சிறையில் உள்ளார். இந்நிலையில், காரைக்கால் நகர காவல் நிலைய போலீசார் இரண்டு மாதத்திற்கு முன் 164 பக்கம் அடங்கிய குற்றப்பத்திரிகையை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதனிடையே, காரைக்கால் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது நீதிபதி வரதராஜன் குற்றவாளியான சகாயராணி விக்டோரியாவிடம் குற்றம் குறித்து கேள்வி எழுப்பிய நிலையில் அதனை ஏற்க அவர் மறுப்பு தெரிவித்தார். இதனை அடுத்து நீதிபதி வழக்கை மேல் விசாரணைக்காக காரைக்கால் மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டார். வழக்கு வரும் 16 ம் தேதி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்