ஜலதோஷத்துக்கு ஆவி பிடித்த மாணவி துடிதுடித்து பலி - வீட்டில் ஆள் இல்லா நேரம் நேர்ந்த துயரம்
ஜலதோஷத்துக்காக ஆவி பிடித்த நர்சிங் மாணவி, வெந்நீர் பானைக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்செந்தூர் அருகே ஆத்தூர், மேலசேர்ந்த பூமங்கலம் கிராமத்தை சேர்ந்த கவுசல்யா, தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு ஜலதோஷத்தால் அவதிப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், வெந்நீரில் மருந்து கலந்து ஆவி பிடித்தபோது, திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு வெந்நீரிலே மயங்கி விழுந்துள்ளார். அருகில் யாரும் இல்லாததால், சுமார் 20 நிமிடங்களுக்கும் மேலாக வெந்நீர் பானைக்குள் தலை மூழ்கிய நிலையில் கவுசல்யா கிடந்துள்ளார். அதன்பிறகு, அங்கு வந்து அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்
Next Story