ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த மாணவிக்கு நேர்ந்த சோகம் - அதிர்ச்சியில் பெற்றோர்
தமிழக ஆந்திர எல்லைப் பகுதியில் 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தடுப்பணையில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் விஷமங்கலம் பகுதியை சேர்ந்தவர் 14 வயது சிறுமி கலைச்செல்வி. இவர் தமிழக ஆந்திர எல்லைப்பகுதியான புல்லூரில் உள்ள கனக நாச்சியம்மன் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். கோவிலுக்கு அருகேயுள்ள பாலாற்று தடுப்பணையில் குடும்பத்துடன் குளித்துக் கொண்டிருந்த சிறுமி, தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு ஆழமான பகுதியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிறுமியின் உடலை கைப்பற்றி மருத்துவமனை கொண்டு சென்ற போலீசார், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story