"தடையை மீறி இயக்கப்பட்டால் கடும் நடவடிக்கை.." - மக்களுக்கு எச்சரிக்கை
ஒடிசாவில் கனமழை பெய்து வரும் நிலையில், மகாநதி ஆற்றில் தடையை மீறி படகு இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் ஹிராகுட் அணையில் இருந்து மகாநதி ஆற்றுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஆற்றில் வெள்ளப்பெரும் ஏற்படும் அபாயம் உள்ளதால் படகு சவாரிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனினும், தடையை மீறி படகு இயக்கப்பட்டால், ஆற்று வெள்ளத்தில் 70 பேர் சிக்கி கொண்டனர். அவர்களை பாதுகாப்பாக மீட்ட அதிகாரிகள் தடையை மீறி ஆற்றில் படகு இயக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.
Next Story