"கள்ளசந்தை மது விற்றால் கடும் நடவடிக்கை"...எச்சரித்த ஆணையர் சங்கர்..!

x

பொதுமக்கள் மனு மீது குறை தீர்க்கும் முகாம் 2வது முறையாக, திருமுல்லைவாயலில் உள்ள தமிழ்நாடு காவலர் திருமண மண்டபத்தில் நடந்தது. அதில் கலந்துகொண்ட ஆவடி ஆணையர் சங்கர், பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களை பெற்று, சம்பந்தப்படட் காவல்நிலையம் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வழிப்பறி செய்யப்பட்ட மூன்றரை சவரன் நகையை மீட்டுத் தரக்கோரி பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், கண்டுபிடித்து தரக்கோரி முதியவர் ஒருவர் மீண்டும் புகார் அளிக்கவே, விரைந்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். பின்னர் பேசிய ஆவடி ஆணையர் சங்கர், ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அரசு அனுமதித்த நேரத்தை தவிர, கள்ள சந்தையில் மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்