மாலை கரையை கடக்கும் 'பிபர்ஜாய்' புயல்... இனி எவ்வளவு வேகத்தில் காற்று வீசும்? - ரயில்கள் ரத்து.. மக்கள் என்ன செய்ய கூடாது..?

x

குஜராத் அருகே துவாரகாவில் இருந்து மேற்கு தென்மேற்கே 290 கிலோ மீட்டர் தொலைவில் அரபிக் கடலில் 'பிபர்ஜாய்' அதி தீவிர புயல் நிலை கொண்டுள்ளது. மணிக்கு 3 கிலோ மீட்டர் வேகத்தில் மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கும் இந்த புயல், குஜராத்தின் மண்ட்விக்கும், பாகிஸ்தானின் கராச்சிக்கும் இடையே, இன்று மாலை கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அப்போது 155 முதல் 170 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்து. இன்றும், நாளையும் தீவிர புயலாக நீடிக்கும் என்றும், 16ஆம் தேதி தீவிர புயலாகவும், தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்தமாகவும் வலுவிழக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால், குஜராத்தின் பல்வேறு மாவட்டங்கிளல் அதீத கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக, 69 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 33 ரயில்கள் பகுதி அளவும் ரத்து செய்யப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்