போராட்ட களத்தில் போலீஸ் மீது கற்கள் வீச்சு.. உச்சகட்ட பதற்றத்தில் விருதுநகர்

x

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே சட்ட விரோதமாக சாலை மறியலில் ஈடுபட்டதாக கூறி, 350-க்கும் மேற்பட்டவர்கள் மீது ஆவியூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூரில் கோயில் சாமி கும்பிடுவதில் இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டது.

ஒரு தரப்பை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் திடீரென மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே சட்ட விரோதமாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி, 280 பேர் மீதும், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். கற்கள் வீசி தாக்குதல் நடத்திய சுமார் 50 பேர் மீது மாவட்ட எஸ்.பி ஸ்ரீனிவாச பெருமாள் உத்தரவின் பேரில் ஆவியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பதற்றம் தொடர்வதால் 700-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் குவிந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்