RCB-க்கு தன் பேட்டால் Ground-ஐ சுத்தி காட்டிய ஸ்டொய்னிஸ், பூரன் - ஹார்ட்டை உடைத்த கடைசி பந்து
ஐபிஎல் தொடரின் 15வது லீக் ஆட்டத்தில், பெங்களூரு - லக்னோ அணிகள், மோதின. முதலில் பேட் செய்த பெங்களூரு அதிரடி தொடக்கம் கண்டது.
அதிரடியாக விளையாடிய விராட் கோலி 61 ரன்கள் எடுத்தார். அந்த அணியின் கேப்டன் டூ பிளஸ்சிஸ், 5 சிக்சர் மற்றும் 5 ஃபோர்களுடன் 79 ரன்கள் எடுத்தார். இதில் 115 மீட்டர் சிக்சரும் அடங்கும்.
இருவரையும் தொடர்ந்து மேக்ஸ்வெல்லும் பந்துகளை விளாச, பெங்களூரு அணி 212 ரன்கள் குவித்தது. மேக்ஸ்வெல் 59 ரன்கள் எடுத்தார்.
பின்னர் களமிறங்கிய லக்னோ அணியில் கைல் மேயர்ஸ், க்ருணால் பாண்டியா ஆகியோர் டக் அவுட் ஆனார்கள். ஹூடா 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அதிரடி காட்டிய ஸ்டோனிஸ் 65 ரன்களிலும், அணியின் கேப்டன் கே.எல் ராகுல் 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இருப்பினும் நிக்கோலஸ் பூரன் 19 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க ஆட்டத்தில் பரபரப்பு தொற்றி கொண்டது.
தொடர்ந்து ஆயுஷ் பதோனி ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழக்க, இறுதி ஓவரில் 5 ரன்கள் தேவைப்பட்டது.
பரபரப்பான கடைசி ஓவரில் மார்க் வுட்டும், 5வது பந்தில் உனத்கட்டும் ஆட்டமிழந்தனர். இருப்பினும் கடைசி பந்தில் கிடைத்த பைஸினால், லக்னோ அணி திரில் வெற்றி பெற்றது.