கொழுந்துவிட்டு எரிந்த இரும்பு உருக்கு ஆலை - பதைபதைக்கும் காட்சிகள்

x

பல்லடம் அருகே, இரும்பு உருக்கு ஆலையில், திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் மாதப்பூர் பகுதியில், தனியாருக்கு சொந்தமான இரும்பு உருக்கு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு, ஆலை குடோனில் இருந்த மூலப்பொருட்கள் திடீரென தீப்பற்றி, கொழுந்துவிட்டு எரியத் தொடங்கின. இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை போராடி அணைத்தனர். இந்த விபத்தில், பல லட்சம் மதிப்பிலான இரும்பு பொருட்கள், தீயில் கருகி நாசமாகின.


Next Story

மேலும் செய்திகள்