"பிரான்சில் திருவள்ளுவருக்கு சிலை"...தமிழ் மொழியை தலை நிமிர செய்த பிரதமர் மோடி

x

பிரான்ஸ் தேசிய தின விழாவில் கலந்து கொள்வதற்காக, வெள்ளிக்கிழமை பிரான்ஸ் சென்றடைந்த பிரதமர் மோடி, இந்திய நேரப்படி இரவு 11 மணி அளவில், பாரீஸில் இந்திய சமூகத்தினர் மத்தியில் உரையாற்றினார்.

அப்போது, வெளிநாடுகளில் பாரத மாதா வாழ்க என்ற முழக்கத்தை கேட்கும்போதெல்லாம், என் வீட்டுக்கு வந்ததைப் போலவே உணர்கிறேன் என்று கூறி மோடி கூறினார்.

இருநாட்டு மக்களுக்கு இடையேயான தொடர்புதான், இந்தியா, பிரான்ஸ் இடையேயான நட்புறவுக்கு வலுவான அடித்தளமாக உள்ளது என்றும் அவர் கூறினார்.

பயங்கரவாத ஒழிப்பு, பருவநிலை மாற்றம், உற்பத்தி விநியோக கட்டமைப்பு என எந்தி பிரச்னையாக இருந்தாலும் உலக நாடுகள் இன்று இந்தியாவை எதிர்பார்த்துள்ளன என்றும் அவர் கூறினார்.

உலகின் மிகவும் பழமையான மொழி தமிழ் என்றும், அந்த மொழியை இந்தியர்கள் பெற்றிருப்பது கூடுதல் பெருமை என்றும் அவர் கூறினார். பிரான்சில் திருவள்ளுவருக்கு சிலை அமைக்கப்படும் என்றும், பிரான்சில் சிலை அமைவது, இந்தியாவுக்கு அளிக்கப்படும் கௌரவமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.




Next Story

மேலும் செய்திகள்