புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து? - மத்திய அரசு அதிர்ச்சி பதில்

x

கடந்த 2018-ஆம் ஆண்டுக்குப் பிறகு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி எந்த தீர்மானமும் வரவில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மக்களவை உறுப்பினர் சுப்பராயன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி அவ்வபோது அந்த மாநில சட்டமன்றம் தீர்மானங்கள் இயற்றி இருப்பதாகவும், இதுகுறித்து நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரை செய்திருப்பதாகவும் கூறினார். கடந்த 2018-ஆம் ஆண்டுக்குப் பிறகு புதுச்சேரி அரசிடம் இருந்து இதுகுறித்து தீர்மானம் எதுவும் வரவில்லை என்றும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்