"ஸ்டேடியம் அதிர தோனி... தோனி-னு என கோஷம் எழுப்ப காத்திருக்கிறோம்" விசில் போடு எக்ஸ்பிரஸில் வந்திறங்கிய CSK ஆர்மி

x

கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்ட விசில் போடு எக்ஸ்பிரஸ், 750 ரசிகர்களுடன் சென்னை வந்தடைந்தது.

சென்னை-பஞ்சாப் இடையே சேப்பாக்கத்தில் இன்று மதியம் நடைபெறும் ஐபிஎல் போட்டியை காண்பதற்காக, தென் மாவட்டங்களில் இருந்து விசில் போடு எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் இருந்து நெல்லை, மதுரை, திண்டுக்கல், திருச்சி வழியாக இன்று காலை 750 சென்னை ரசிகர்களுடன், சென்ட்ரல் ரயில் நிலையத்தை விசில் போடு எக்ஸ்பிரஸ் வந்தடைந்தது. விசில் போடு எக்ஸ்பிரஸில் வந்த 750 ரசிகர்களுக்கும் போட்டிக்கான டிக்கெட், பயண செலவு, உணவு செலவு, தங்குமிட செலவை சென்னை அணி ஏற்றுள்ளது. இதனிடையே இன்றைய போட்டியைக் காண மிகவும் ஆர்வத்துடன் உள்ளதாகவும், தோனி தோனி என மைதானத்தில் கோஷம் எழுப்பக் காத்திருப்பதாகவும் சென்னை அணியின் ரசிகைகள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்