ஸ்ரீபெரும்புதூர் 3 மணி நேரம் சிறைபிடிப்பு... 3 செண்ட் இடம் வழங்குவதாக உறுதி
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த நரியம்பாக்கம் கிராமத்தில் நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 62 வீடுகளை நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றப்பட்டன.
இதனால் பாதிக்கப்பட்ட மக்கள், மாற்று இடம் வழங்கக் கோரி ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர், குன்றத்தூர் வட்டாட்சியர், குன்றத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் காவல்துறையினரை 3 மணி நேரம் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பதற்றம் அதிகரித்ததை அடுத்து, அப்பகுதியை போலீஸார் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
பாதிக்கப்பட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், இரண்டு நாட்களில் தலா 3 செண்ட் இடம் வழங்குவதாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
3 மேணி நேரம் அதிகாரிகள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story