சீனாவுக்கு பறக்கப் போகும் இலங்கை குரங்குகள்... ஆராய்ச்சிக்காகவா? இறைச்சிக்காகவா? - அதிர்ச்சி தகவல்

x
  • இலங்கையில் குரங்குகள் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் அதிகரித்து வரும் நிலையில், பண நெருக்கடியில் உள்ள இலங்கை, சீனாவுக்கு 1 லட்சம் குரங்குகளை ஏற்றுமதி செய்ய பரிசீலித்து வருவதாக அந்நாட்டின் வேளாண் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
  • டோக் மக்காக் என்ற குரங்கு வகை இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டது...
  • அரிய வகையைச் சேர்ந்த டோக் மக்காக் குரங்குகளை, சீனாவின் வேண்டுகோளின் பெயரில், அந்நாட்டிலுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிரியல் பூங்காக்களுக்கு அனுப்ப உள்ளதாக மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்...
  • இலங்கையில் குரங்குகள் எண்ணிக்கை 30 லட்சத்தைத் தொட்டுள்ள நிலையில், உணவு தேடி கிராமங்களுக்குள் புகுந்து பயிர்களை அழிப்பதாலும், சில சமயங்களில் மக்களைத் தாக்குவதாலும் குரங்குகளை இலங்கைவாசிகள் தொல்லையாகத் தான் கருதுகின்றனர்...
  • இலங்கை இந்த ஆண்டு பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினங்கள் பட்டியலிலிருந்து பலவற்றை நீக்கியது. அந்நாட்டிலுள்ள 3 குரங்கினங்கள், மயில்கள் மற்றும் காட்டுப்பன்றிகள் உட்பட பலவற்றைக் கொல்ல விவசாயிகளுக்கு பச்சைக் கொடி காட்டப்பட்டுள்ளது.
  • இந்த சூழலில் சீனாவில் இருந்து இதுபோன்ற ஒரு கோரிக்கை வந்துள்ளதால், இலங்கையும் மனமுவந்து குரங்குகளைத் தர ஒப்புக் கொண்டுள்ளது...
  • சீனாவுக்கு இறைச்சிக்காக, மருத்துவ ஆராய்ச்சிக்காக அல்லது வேறு என்ன நோக்கத்திற்காக இலங்கை குரங்குகள் தேவை என கேள்வி முன்வைக்கப்பட்ட நிலையில்,
  • இலங்கையிலிருந்து கொண்டு செல்லப்படும் குரங்கொன்றிற்கு சீனா 50 ஆயிரம் இலங்கை ரூபாயை செலவிட உள்ள நிலையில், அவற்றை இறைச்சிக்காக பயன்படுத்த 1 லட்சம் ரூபாய் வரையில் விற்க வேண்டி இருக்கும்... ஆனால் 1 லட்ச ரூபாய் செலவழித்து குரங்குக் கறி சாப்பிட சீனர்கள் முன்வர மாட்டார்கள் என்பதால்
  • அவை உயிரியல் பூங்காக்களுக்குத் தான் அழைத்துச் செல்லப்பட உள்ளதாக மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்