இலங்கையின் குரங்கு சர்ச்சை விவகாரம் - ரகசியத்தை உடைத்த சீனா..!

x

இலங்கையின் எந்த தரப்பினரிடம் இருந்தும் ஒரு லட்சம் குரங்குகளை கேட்கவில்லை என்று சீனா தெரிவித்துள்ளது. இலங்கையில் உள்ள அரிய வகை டோக் மக்காக் குரங்கு வகையை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, அந்த குரங்குகளை சீனா இறைச்சிக்காக வாங்குகிறதா அல்லது ஆராய்ச்சிக்காக வாங்குகிறதா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், இலங்கையிடம் இருந்து ஒரு லட்சம் குரங்குகளைக் கோரவில்லை என்று இலங்கையில் உள்ள சீன தூதரகம் விளக்கம் அளித்துள்ளது. வனவிலங்குகளின் பாதுகாப்பிற்கு சீன அரசு முன்னுரிமை வழங்குவதாகவும், அதற்கான சர்வதேச கடமைகளை நிறைவேற்றுவதாகவும் சீன தூதரகம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்