கொடுத்த கடனை திருப்பி கேட்ட பாட்டி.. தலையில் அம்மிக்கல்லை போட்ட காவலர் - விசாரணையில் வெளிவந்த அடுத்த அதிர்ச்சி

x

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாங்கிய கடனை திருப்பி கேட்ட மூதாட்டியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த ஆயுதப்படை வீரரை போலீசார் கைது செய்தனர்.

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மேலேரி கிராமத்தை சேர்ந்தவர் யசோதா அம்மாள். இவரது கணவரும் உயிரிழந்த நிலையில், இவரது மூன்று மகள்களும் திருமணமாகி வெளியூரில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், தனியே வசித்து வந்த யசோதா வட்டிக்கு கடன் வழங்கி வந்ததாக கூறப்படுகிறது. இவரிடமிருந்து அதே பகுதியை சேர்ந்த ஆயுதப்படை காவலரான சதீஷ் என்ற சக்திவேல் கடன் வாங்கியுள்ளார்.

இதில், கடனை திருப்பி கேட்ட மூதாட்டியை கழுத்தை நெறித்து கொலை செய்த சக்திவேல், தலையில் கல்லை போட்டு சிதைத்து அருகில் உள்ள புதரில் சடலத்தை வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சக்திவேலை கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், அவரது செல்போனில் பல பெண்களின் ஆபாச படங்கள் இருந்ததால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்