போலி பாஸ்போர்ட் தயார் செய்ய காத்திருந்த நபர் - வாகன சோதனையில் கைது.. விசாரணையில் 'திடுக்' தகவல்கள்

x

மதுரையில் வாகன சோதனையில் ஈடுபட்ட என்ஐஏ அதிகாரிகள், போலி ஆதார் கார்டு வைத்திருந்த நபரை கைது செய்து நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


மதுரை பழங்காநத்தம் பகுதியில் என்ஐஏ அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது, கார் ஒன்றில் நடத்திய சோதனையில், காரினுள் இருந்து புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டது.

இதையத்து காரில் இருந்த ஹார்விபட்டியை சேர்ந்த காசி விஸ்வநாதன் என்பவரையும், ஓட்டுநர் ராஜேஷ் என்பவரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ராஜேஷ் என்பவரின் ஆவணங்களை சரிபார்த்த போது, போலி ஆதார் கார்டு மூலம் நகரில் உலா வந்ததும், லைசென்ஸ் பெற்றதும் தெரியவந்துள்ளது.

மேலும், ராஜேஷ் இலங்கையை சேர்ந்தவர் என்பதும், அவரின் உண்மையான பெயர் சிவராஜ் எனபதையும் போலீசார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, துபாயில் போலி பாஸ்போர்ட் மூலம் பணி புரிந்து இந்தியா திரும்பிய சிவராஜ், பாஸ்போர்ட்டை தொலைத்ததால் மீண்டும் போலி பாஸ்போர்ட் பெறுவதற்கு காசி விஸ்வதனிடம் வேலை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்