பொருளாதார சிக்கலில் தவித்து வரும் இலங்கை... கடனுதவி பெற பன்னாட்டு நாணய நிதியம் ஒப்புதல்
பொருளாதார சிக்கலில் தவித்து வரும் இலங்கை, நிதிநிலையை சரிசெய்ய கடன் வாங்க முயற்சித்து வருகிறது. இந்நிலையில், நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ், இலங்கையின் வேலைத் திட்டத்தை அங்கீகரித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் பலதரப்பு நிறுவனங்களிடமிருந்து 7 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவியை இலங்கை பெற இத்திட்டம் உதவும். இதையடுத்து சர்வதேச நாணய நிதியத்திற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க நன்றி தெரிவித்துள்ளார். இலங்கையின் நிலையை மேம்படுத்துவதற்கும் சர்வதேச மூலதனச் சந்தைகளை அணுகுவதற்கும் இந்த வேலைத்திட்டம் இன்றியமையாததாக இருக்கும் என கூறியுள்ளார். மேலும், முதலீட்டாளர்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு இலங்கை ஒரு ஈர்ப்புள்ள நாடு என்பதை மீண்டும் நிரூபிக்கும் என ரணில் தெரிவித்துள்ளார்.
Next Story