நெருக்கடியில் இந்தியா செய்த உதவி நெகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்த இலங்கை... | India | Sri Lanka

x

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுடன், இந்திய வெளியுறவு செயலாளர் வினய் மோகன் குவாத்ரா சந்தித்துப் பேசினார். அப்போது இலங்கை அதிபரின் இந்திய சுற்றுப்பயணம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்தியா-இலங்கை இடையிலான இருதரப்பு உறவுகளை பலப்படுத்துவது குறித்தும், இரு நாட்டு மக்களுக்கும் பலனளிக்கும் வகையில், சமூக மற்றும் பொருளாதார இலக்குகளை எட்டுவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பொருளாதார நெருக்கடியின் போது இலங்கைக்கு, இந்தியா வழங்கி வரும் தொடர்ச்சியான ஒத்துழைப்புக்கு அதிபர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்