காவல்நிலையத்தில் சிறப்பு வசதிகள்..! முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு..! | Police Station | MK Stalin
காவலர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே நல்லுறவை மேம்படுத்தும் வகையில் காவல் நிலையங்களில் 10 கோடி ரூபாய் செலவில், சிறப்பு வசதிகளை ஏற்படுத்த முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பான அறிவிப்பு, 2023-2024-ஆம் ஆண்டிற்கான காவல்துறை மானியக் கோரிக்கையின்போது வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், 250 காவல் நிலையங்களில் தலா 4 லட்ச ரூபாய் செலவில், வரவேற்பறை, பார்வையாளர்களுக்கான கழிப்பறைகள், குடிநீர் வசதிகள் மற்றும் காத்திருப்பு கொட்டகைகள் போன்ற வசதிகளை ஏற்படுத்திட முதலமைச்சர் ஸ்டாலின் நிர்வாக ஒப்புதல் அளித்து உத்தரவிட்டுள்ளார்.
Next Story