வானில் இன்று நிகழும் அரிய நிகழ்வு - ஒரே நேர்கோட்டில் வியாழன், வெள்ளி...!

x
  • இன்று வானில் மிக அரிதான நிகழ்வாக, வானில் மிக அருகில் வெள்ளி, வியாழன் கோள்களை காணலாம்...
  • சூரிய குடும்பத்தில் சூரியனை சுற்றும் ஒவ்வொரு கோள்களும் அதற்கே உரித்தான கோணங்களில் சாய்ந்து, நீள் வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன.
  • அப்படி சுற்றும் போது கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் வருவது வழக்கமானது.
  • அந்த வகையில் கடந்த 21, 22 ஆம் தேதிகளில் வானில் வெள்ளி, வியாழன் மற்றும் நிலவு ஒரே நேர்கோட்டில் சந்தித்த அரிய நிகழ்வை காண முடிந்தது.
  • அந்தவகையில் இன்று வானில் வெப்பமான கோளான வெள்ளியும், ராட்சத கோளான வியாழனும் மிக அருகில் வருவதை காண முடியும். இரண்டு கோள்களும் வானத்தில் வெறும் 0.5 டிகிரி அளவு இடைவெளியில் இருக்கும் என விஞ்ஞானிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • உண்மையில் இரண்டு கோள்களுக்கு இடையே மில்லியன் கணக்கான கிலோ மீட்டர் இடைவெளி இருக்கும்.
  • இரு கோள்களும் சூரியனை சுற்றும் போது ஒரே நேர்கோட்டில் வருவதால் இரண்டும் அருகில் இருப்பதாக காண முடிகிறது.
  • இரண்டு கிரகங்களும் ஏற்கனவே இரவு வானத்தில் மிகவும் பிரகாசமாக உள்ளன, இரண்டும் சந்திக்கும் அரிய நிகழ்வை உலகம் முழுவதும் வானில் மக்கள் வெறும் கண்களால் பார்க்கலாம்.

Next Story

மேலும் செய்திகள்