"ஈஸ்டோனியா நாட்டைபோல தென்காசி முன்னேறும்" - ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு
தென்காசி மாவட்டம் கோவிந்தபேரியில், ஜோஹோ நிறுவனத்தின் கல்வி மையம் சார்பில், இலவச முழு உடல் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதனை, ஜோஹோ நிறுவனர் பத்மஸ்ரீ ஸ்ரீதர் வேம்பு தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது, ஈஸ்டோனியா நாட்டைபோல தென்காசி மாவட்டமும் அனைத்து துறைகளிலும் முன்னேறும் என நம்பிக்கை தெரிவித்தார். தொடர்ந்து நிகழ்ச்சி நிறைவுக்கு பின், தனது உதவியாளரை பின் இருக்கையில் வைத்துக்கொண்டு, அவர் எலக்ரிக் ஆட்டோவை ஓட்டிச் சென்றது, அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
Next Story